Headlines

பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தின் கடைசி நேர அழைப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது இடம்பெற்ற இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அழைப்பு தொடர்பில் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கப்பலானது அதன் செயல்திறனை இழந்தவுடன், அதன் அதிகாரிகள் ”கப்பல் மோதப்போகிறது. பாலத்தை நெருங்கி வருகிறது, அது திசைமாற்றி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.

“நாங்கள் அதைக் கட்டுப்படுத்தும் வரை, எல்லா போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும்.”என்ற அழைப்பே பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றியுள்ளது.

இந்த அழைப்பானது மேரிலாந்து மாகாண போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவருக்கே ரேடியோ ட்ராபிக் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கப்பலின் அதிகாரிகளை “ஹீரோக்கள்” என்று பாராட்டியதற்கு இந்த அவசர அழைப்புதான் காரணமாகும்.

மேலும், அவர்களின் விரைவான நடவடிக்கையே, உயிர்களைக் காப்பாற்றியமைக்கு பிரதான கரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நிமிடங்களுக்கு முன்னதான அழைப்பு

மோதல் ஏற்பட இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாகவே அழைப்பு கிடைத்ததால், பாலத்தில் பணிப்புரிந்த 6 பேரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.   

அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின்மீது சரக்கு கப்பல் ஒன்று நேற்று மோதியதில், பாலம் சிதைந்து விழுந்தது.

பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தின் கடைசி நேர அழைப்பு | America Bridge Accident Last Call Viral

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

டாலி என அழைக்கப்படும் அந்தச் சரக்கு கப்பலில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் என சரக்கு கப்பலை நிர்வகிக்கும் குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கப்பலில் இருந்த இந்திய அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

`கப்பலில் இருந்த பணியாளர்கள் தங்கள் கப்பல் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மேரிலாண்ட் போக்குவரத்துத்துறையை எச்சரித்துள்ளனர்.

ஜோ பைடன் கருத்து 

அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் பாலத்தின்மீதான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, பாலத்தை மூடுவதற்கு முயன்றுள்ளனர்.

இதன் காரணமான உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நடந்த அனைத்தும் இது ஒரு பயங்கரமான விபத்து என்பதைக் குறிக்கிறது.

பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தின் கடைசி நேர அழைப்பு | America Bridge Accident Last Call Viral

 மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8,50,000 வாகனங்கள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்கின்றன. எனவே கூடிய விரைவில் அதைச் சீரமைத்து, போக்குவரத்தை உறுதிசெய்வோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply