Headlines

ஹர்திக் பாண்டியாவை செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் காணொளி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவர் ஹர்திக் பாண்டியா திரையில் பேசும்பொழுது ரசிகர்கள் செருப்பால் அடிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஐபிஎல் போட்டிகள் கடந்த 22-ஆம் திகதி முதல் தொடங்கி சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டிலும் தோல்வியை தழுவி 9-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற மும்பை அணி கடந்த சில ஆண்டுகளாகவே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்

இதனால் மும்பை அணி நிர்வாகம், அவ்வணி தலைவராக இருந்த ரோகித் ஷர்மாவிற்கு பதிலாக, ஹர்த்திக் பாண்டியாவை அணித்தலைவராக மாற்றியது. இதனால் ரோகித் ஷர்மா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ஹர்திக் பாண்டியாவை செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் காணொளி | Hardik Pandya Leadership Fans Reaction Rohit

கடந்த முதல் போட்டியில், குஜராத் அணியுடன் மோதிய போது, முன்னாள் அணித்தலைவர் என பார்க்காமல் ரோகித் ஷர்மாவை மைதானத்தில் அங்கும் இங்கும் பந்து வீச்சு செய்ய அலைக்கழித்த ஹர்திக் மீது மீண்டும் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதனை குறித்து, ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், தங்களது இரண்டாவது போட்டியில், நேற்று ஹைதராபாத் அணியை சந்தித்த மும்பை அணி மீண்டும் தோல்வியை தழுவியது.

இதனால் மீண்டும் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ரசிகர்கள், ஹர்திக் பாண்டியா பேட்டி கொடுக்கும் திரையின் மீது, செருப்பை வீசி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply