Headlines

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை பார்வையிட வந்த நிலையில் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

அவர் மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்தார்.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி! | Galagoda Aththe Ganasara Thero At Hospital

அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார் என தெரிவித்தார்.

சிறைத்தண்டனை 

கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டார்.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி! | Galagoda Aththe Ganasara Thero At Hospital

இதனையடுத்து  ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply