Headlines

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் மில்டன் பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்துச் சம்பவத்தில் மூன்று பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டெரி வீதி மற்றும் 6ம் தெருவிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 26 வயதான ஆண் ஒருவரும், 18 வயதான சிறுவனும் 16 வயதான சிறுமியும் கொல்லப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவி;க்கின்றனர்.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் பலி | Fatal Collision Milton Derry Road Sixth Line

விபத்தில் சிக்கிய மூவரும் சம்பவ இடத்திலேயே துரதிஸ்டவசமாக கொல்லப்பட்டுள்ளதாக ஹால்டன் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் மில்டன் மற்றும் பிரம்ரன் பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

Leave a Reply