தைவானில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தன.
குறித்த நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் தாதியர்கள் சிலர் குழந்தைகளை பாதுகாப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்த காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது.
எக்ஸ் தளத்தில் வைரலான இந்த காணொளியில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக தாதியர்கள் கட்டிலை ஒன்றாக சேர்த்து பாதுகாக்கும் காட்சிகள் உள்ளது.

நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.
இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் தாதியர்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.