Headlines

திடீரென தீப்பிடித்து எரித்த கப்பல்… 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த நிலை?

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

சூரத் தானி மாகாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் கோ தாவோவுக்கு சென்ற படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தாய்லாந்தின் பிரபல கடற்கரை சுற்றுலா தலமாக கோ தாவோ உள்ளது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

திடீரென தீப்பிடித்து எரித்த கப்பல்... 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த நிலை? | A Fire On A Boat Carrying Tourists In Thailand

அந்த வகையில் சூரத் தானி மாகாணத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கோ தாவோவுக்கு ஒரு படகில் சென்றனர்.

இதன்போது, அவர்கள் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது. இதனால் பயத்தில் அவர்கள் படகில் இருந்து கடலுக்குள் குதித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த கடலோர போலீசார் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி சுற்றுலா பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு வேறு சில படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதன்மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply