Headlines

கனடாவில், சத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
Follow us on Google News

விளம்பரம்

கனடாவின் ரெஜினா பகுதியில் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பம் ஒன்று அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரெஜினாவைச் சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது அதிகளவு சத்தம் எழுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில், சத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம் | Regina Father And 5 Children Left On Street

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த குடும்பம் குறுகிய அறிவித்தலின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் குறித்த குடும்பம் நடு வீதியில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் உள்ளிட்டன உரிய முறையில் செலுத்தி வந்ததாக குறித்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் அதிகளவு சத்தம் எழுப்பப்படுவதாகத் தெரிவித்தே இவ்வாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply