Headlines

பூமியை தாக்கும் சூரியப் புயல் : முன்கூட்டியே எச்சரிக்கும் மரங்கள்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பூமியை சூரியப் புயல் தாக்குவது தொடர்பில் மரங்கள் மூலம் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, விஞ்ஞானிகள் இதனை கூறியுள்ளனர்.

பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 

புவி காந்த புயல்

கடந்த 1859 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சக்திவாய்ந்த புவி காந்த புயல் (Geomagnetic Storm) ஏற்பட்டது. இதனை கேரிங்டன் நிகழ்வு என கூறுவார்கள். 

solar storm 2025 Lapland

இந்த புயல் ஏற்பட சற்று நேரத்துக்கு முன்பு பாரிய சூரிய கதிர்வீச்சு சம்பவமொன்று பதிவாகியது. 1859 ஆம் ஆண்டின் சோலார் சூப்பர்ஸ்டார்ம் (Solar Superstorm) அல்லது கேரிங்டன் ஃப்ளேர் (Carrington Flare) என அழைக்கப்படுகிறது. 

இதன் போது மிகவும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்னூட்டப்பட்ட துகள்கள் பூமியை நோக்கி அனுப்பப்பட்டன.

லப்லாந்தில் உள்ள மரங்கள்

பூமியின் காந்த மண்டலத்துடன் இந்த துகள்கள் தொடர்பை ஏற்படுத்தியதையடுத்து, பாரிய புவி காந்த புயல் ஏற்பட்டது. 

solar storm 2025 Lapland

இந்த நிலையில், தற்போது பின்லாந்தின் (Finland) லப்லாந்தில் உள்ள மரங்கள் சூரியப் புயலின் தாக்கத்தை முன்கூட்டியே வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 165 வருடங்களுக்கு முன்னர் பூமியை தாக்கிய சூரிய புயலையும் இந்த மரங்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புயலின் தாக்கங்கள்

அத்துடன், கடந்த 1859 ஆம் ஆண்டு ஏற்பட்ட புவி காந்த புயலின் தாக்கங்களையும் லப்லாந்தில் (Lapland) உள்ள மரங்கள் எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

solar storm 2025 Lapland

இதன் மூலம் குறித்த புயலின் தாக்கத்தால் பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பிலும் ஆராயக்கூடியதாக உள்ளதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியப் புயல்

இந்த பின்னணியில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  

solar storm 2025 Lapland

மேலும், சூரியப் புயல்களை வரைபடமாக்குவதும், அவற்றின் அதிர்வுகளை கணிப்பதும் நவீன சமுதாயத்தின் தயார் நிலைக்கு முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Leave a Reply