Headlines

அரிசியின் விலையை உடனடியாக குறைக்குமாறு கோரி வடக்கு – கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் 

அதனடிப்படையில் மன்னார்(Mannar) மாவட்டத்திலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்களின் அடிப்படை உணவு

“ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அடிப்படை உணவு அரிசிச் சோறு. அந்த வகையில் தற்காலத்தில் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருட்களின் விலையேற்றமும் கிராம மட்டங்களில் உள்ள வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பாரிய உணவு தட்டுப்பாடு மட்டுமல்லாது போசாக்கு குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பல மக்கள் தங்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர். குறிப்பாக இலங்கையில் கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்டுள்ள அரிசியின் விலை ஏற்றம் என்பது நாளாந்தம் தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கும் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களிலும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு வேளைகளில் மட்டுமே உணவிணை பெற்றுக்கொள்ள கூடிய நிலையில் உள்ளனர்.

சில குடும்பங்களில் சோறு இல்லாமல் கஞ்சி காய்ச்சி குடித்து கொண்டு இருக்கின்றனர். பெண் தலைமை தாங்கும் குடுமபங்களில் இந்த அரிசியின் விலை ஏற்றம் இன்னும் பட்டினிக்கு தள்ளியுள்ளது.

தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட யுத்தம் ,கோவிட் தாக்கம், வெள்ளம், வரட்சி மற்றும் தற்கால பொருளாதார நெருக்கடி அடி நிலையிலுள்ள வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உணவுத் தேவையில் அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளது. சிறுவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் பெண்கள் அனைவரும் தமது பசியினைப் போக்குவதற்காக போசாக்கற்ற உணவுகளை உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.” என வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி – ஆஸிக்

கிளிநொச்சி 

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் குறிப்பாக அரிசியின் விலை ஏற்றம் குறித்து மக்கள் வாழ்வதற்கான வசதியான விலை குறைப்பை முன்னெடுக்க கோரி கிளிநொச்சி(Kilinochchi) நகரத்தில் இன்று காலை கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் வழிகாட்டலில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

செய்தி – யது

முல்லைத்தீவு

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தின் சிலாவத்தை பகுதியிலும் இன்று அரிசியின் விலை ஏற்றம் குறித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் மத்தியில் பாரிய உணவு தட்டுப்பாடு மற்றும் போசனைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உணவு அரிசி சோறு ஆகும் அரிசியின் விலை அதிகரித்ததன் காரணமாக பல மக்கள் மூன்று வேளை உணவு உண்பதற்கு பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள் எனவும் நமது மக்கள் ஒருவேளை உணவு இரண்டு வழி உணவையே இருப்பதாகவும் பாடசாலை மாணவர்கள் பாடசாலையில் மயங்கி விழுவதாகவும் ஆகையினால் அரிசி விலையை 100 ரூபாக்கு கீழ் குறைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி – சான்

வவுனியா 

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மக்கள் வாழ்வதற்கான வசதியான விலை குறைப்பை முன்னெடுக்க கோரி வவுனியா இராசேந்திரங்குளத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது விவசாயிகளுக்கு இலவச திட்டங்களை வழங்கு, பட்டினிச்சாவு எதிர்காலத்தில் வேண்டாம், மூன்று வேளை உணவு எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு பெண்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply