Headlines

இஸ்ரேலில் கொடூர தாக்குதலில் மகன்கள், பேரன்களை இழந்த ஹமாஸ் மூத்த தலைவர்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கொடூர தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள் மற்றும் 4 பேரன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இதனை உறுதி செய்துள்ளது. 

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் ஹமாசின் கோரிக்கைகளை இந்த சம்பவம் மாற்றாது என்று ஹனியே தெரிவித்துள்ளார். 

முஸ்லீம் பண்டிகையான ஈத் பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் குடும்ப கொண்டாட்டத்திற்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஹசீம், அமீர் மற்றும் முகம்மது ஆகிய மூன்று மகன்கள் மற்றும் மோனா, அமல், கலீத் மற்றும் ரஸான் ஆகிய நான்கு பேரன்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply