Headlines

கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவரா? நீங்களும் நட்டஈடு பெற முடியும்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலைபேசிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுகின்றது.

கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவரா? நீங்களும் நட்டஈடு பெற முடியும் | Iphone Class Action Claim

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து 14.4 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2023ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கனடிய பிரஜைகளாக இருப்பவர்கள் இந்த நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவிதமான மற்றுமொரு வழக்கு குபெக்கிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை எப்பள் நிறுவனம் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply