Headlines

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் ; ஹமாஸ் படைத் தளபதி பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஹமாஸ் குழுவினர் எனச் சந்தேகிக்கப்படும் நபா்களைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவத்தினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் ; ஹமாஸ் படைத் தளபதி பலி | Hamas Commander Killed In Israeli Attack

இதில் துபாஸ் நகரத்தையொட்டிய அல்-பரா அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதலில் ஹமாஸின் உள்ளூா் தளபதியான முகமது தராக்மே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 460 பலஸ்தீனா்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

இஸ்ரேலிற்கு (Israel) எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் ஈரான் மூலம் (Iran) மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் ; ஹமாஸ் படைத் தளபதி பலி | Hamas Commander Killed In Israeli Attack

பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும், பதற்ற நிலையை அதிகரிக்ககூடாது எனவும் அவுஸ்திரேலிய (Australia) வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 63 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 33,545 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் , 76,094 பேர் காயமடைந்துள்ளனர்.

கான் யூனிஸிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியிருப்பினும் அங்குள்ள வைத்தியத் துறைக்கு ஏற்பட்ட சேதம், எவராலும் கற்பனை செய்ய முடியாத அளவிலுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

Leave a Reply