Headlines

கனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொலை!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வி பயின்று வரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான சிரங் அன்டில் என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொலை! | 24 Year Old Indian Student Shot Dead In Canada

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வரும் சிரங் அன்டில் நேற்று முன் தினம் வென்கவெர் நகரின் கிழக்கு 55வது அவன்யூ பகுதியில் தனது சொகுசு காரில் பயணித்துள்ளார்.

அப்பகுதியில் முக்கிய தெருவில் இரவு 11 மணியளவில் சிரங் அன்டில் காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. 

கனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொலை! | 24 Year Old Indian Student Shot Dead In Canada

இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த சொகுசு காரை பரிசோதித்தனர்.

அப்போது அந்த காரில் சிரங் அன்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சிரங்கின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், சிரங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது யார்? அல்லது சிரங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply