Headlines

உலகின் மிக வயதுடைய ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்கா – பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 62 வயதான லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் இருவரும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1961-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் திகதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக ஒட்டிபிறந்துள்ளனர்.

உலகின் மிக வயதுடைய ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு! | World S Oldest Conjoined Twin Sisters Have Died

பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனினும், 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்தனர்.

இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள்.

உலகின் மிக வயதுடைய ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு! | World S Oldest Conjoined Twin Sisters Have Died

மேலும், கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களானார்கள்.

இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உள்பட உலக அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Leave a Reply