Headlines

கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்: சமீபத்திய தகவல்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கத் திருட்டு சம்பவம் என அழைக்கப்படும் சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்: சமீபத்திய தகவல் | The Largest Gold Heist In Canadian History

அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்: சமீபத்திய தகவல் | The Largest Gold Heist In Canadian History

அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பது.

அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு சுமார் 20 மில்லியன் டொலர்கள்.

கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்: சமீபத்திய தகவல் | The Largest Gold Heist In Canadian History

அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, திருட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஏர் கனடா பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் தெற்காசியர்கள். அவர்களில் இருவர் இந்திய வம்சாவளியினர்.

கனடாவில் நிகழ்ந்த திரைப்படத்தை மிஞ்சிய திருட்டு சம்பவம்: சமீபத்திய தகவல் | The Largest Gold Heist In Canadian History

கைது செய்யப்பட்ட ஏர் கனடா நிறுவன ஊழியரின் பெயர் Parmpal Sidhu (54). Simran Preet Panesar (31) என்னும் மற்றொரு முன்னாள் ஊழியரை பொலிசார் தேடிவருகிறார்கள்.

விடயம் என்னவென்றால், திருடப்பட்டதில் ஒரு கிலோ தங்கமும் சுமார் 400,000 டொலர்கள் பணமும் மட்டுமே மீட்கப்படுள்ளதாம். மீதமுள்ள தங்கம் உருக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.

Leave a Reply