Headlines

ரொறன்ரோவை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும்.

ரொறன்ரோவை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள் | Home Prices Pass 2M In Nearly Half Of Toronto

இவ்வாறான ஓர் பின்னணியில் நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக் குடியிருப்பாளர்கள் எத்தனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ரொறன்ரோவில் வீட்டு வாடகைத் தொகை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வீட்டு மனைகளின் விலை உயர்வு மற்றும் வாடகைத் தொகை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் ரொறன்ரோவில் குடியிருப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Leave a Reply