Headlines

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 2 இந்திய மாணவர்கள்!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஸ்காட்லாந்தில் உள்ள அருவியில் நீராடச் சென்ற 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் (17-04-2024) மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். 

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 2 இந்திய மாணவர்கள்! | Indian Students Swimming Waterfall Fell And Died

அங்கு சென்றதும் அருவியில் குளித்து கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். 

இது தொடர்பில் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டுள்ளனர்.

மேலும், அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதேவேளை, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது.

மாணவர்கள் மரணம் குறித்த தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply