Headlines

இலங்கைக்கு பெருமளவு டொலர்களை ஈட்டித் தந்த இறால் : ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்நாட்டிற்கு அதிகளவு அன்னியச் செலாவணியை ஈட்டித்தந்த இறால் வியாபாரம் தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இறால் வியாபாரம் தற்போது மன்னார், மட்டக்களப்பு, தங்காலை பிரதேசங்களிலும் பரவியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இறால் உற்பத்தி 

அதன்படி, தற்போது செயல்பாட்டில் உள்ள இறால் குளங்களின் எண்ணிக்கை சுமார் 27,000 ஆகும். இறால் தொழிலை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு பெருமளவு டொலர்களை ஈட்டித் தந்த இறால் : ஏற்பட்டுள்ள வீழ்ச்சி | Prawns Have Earned Sri Lanka A Lot Of Dollars

நாட்டின் குளங்களில் இறால் வியாபாரத்தின் முக்கிய இலக்கு வெளிநாட்டு சந்தையாகும். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 11,000 மெட்ரிக் டன் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இறால் தொழில் 18 சதவீதமாக குறைந்துள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply