Headlines

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

யாழ். போதனா வைத்தியசாலையில் (JaffnaTeaching Hospital) இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி (Klinochchi) பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு | Women Death In Jaffna Teaching Hospital Issues

அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply