Headlines

அமீரகத்தில் மீண்டும் கொட்டப்போகும் மழை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொட்டித்தீர்த்த மழையால் மகளின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் மீண்டும் மழை பெய்யவுள்ளதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம்   அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி   துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அமீரகத்தில் மீண்டும் கொட்டப்போகும் மழை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Rain To Pour Again In Emirates Release Warning

இந்த நிலையில் நேற்று அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) லேசான பனிமூட்டத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படும்.

அடுத்த வார தொடக்கத்தில் வரும் 22-ந் தேதி நாடு முழுவதும் பரவலாக லேசான மழை காணப்படும். அதற்கு அடுத்த நாள் 23 ஆம் திகதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப்பொழிவுக்கு பிறகு வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Leave a Reply