Headlines

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்! ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பாகிஸ்தானில் ஒரெ பிரசவத்தில் பெண்ணொருவர் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத்(27) கடந்த 18-ம் திகதி இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்! ஆச்சரியத்தில் மருத்துவர்கள் | Woman Gave Birth To 6 Children One Birth Pakistan

பின்னர் அவர் கடந்த 19 திகதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

குறித்த பெண் ஒரு மணித்தியாலத்திற்கு 6 குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பர்சானா தெரிவித்துள்ளார்.

மேலும், 4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply