Headlines

நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்… ஒருவர் உயிரிழப்பு! 7 பேர் மாயம்

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஜப்பானில் பயிற்சியின்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்... ஒருவர் உயிரிழப்பு! 7 பேர் மாயம் | Helicopters Collided During Training Japan 1 Death

ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் நேற்று இரவு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கில் டோரிஷிமான் தீவில் இருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் நடைபெற்ற நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்... ஒருவர் உயிரிழப்பு! 7 பேர் மாயம் | Helicopters Collided During Training Japan 1 Death

குறித்த விபத்தின் போது இரு விமானங்களிலும் தலா 4 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 7 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply