Headlines

யாழில் தனியார் பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துநர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து நேற்று இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டம்

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் (20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் தனியார் பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல் | Jaffna For Attack Bus Employee

குறித்த போராட்டம் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply