Headlines

அமெரிக்காவில் பயங்கர விபத்து சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் கடந்த 20-04-2024 திகதி இடம்பெற்றுள்ளது.  

அமெரிக்காவில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்! | America Two Car Accident 2 Indian Students Death

இச்சம்பவத்தில் இந்தியா – தெலுங்கானாவை சேர்ந்த 19 வயதான முக்கா நிவேஷ் மற்றும் கவுதம் பார்சி என்ற மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவுக்கான பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்! | America Two Car Accident 2 Indian Students Death

அப்போது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு கார் ஒன்று அவர்களுடைய கார் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த மோதலில், இந்திய மாணவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அரிசோனா பொலிஸார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை கைப்பற்றினர்.

இதன்பின்னர், அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், இவர்கள் சென்ற கார் மீது மோதிய வாகனத்தின் சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply