Headlines

தேயிலைத் தொழிற்சாலையில் தீப்பரவல் பிரதேசவாசிகளின் முயற்சியால் பேரழிவு தவிர்ப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில் அமைந்திருந்த தேயிலைத் தொழிற்சாலையொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தானது (21.04.2024) மாலை 3.30 மணியளவில் திடீரென ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

தீப்பரவலை தொழிலாளர்கள்,  ஹட்டன் – டிக்கோயா தீயணைப்பு படை மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

தேயிலைத் தொழிற்சாலையில் உள்ள  அடுப்பில் ஏற்பட்ட அதிக சுவாலை காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இத்தீப்பரவல் காரணமாக தொழிற்சாலைக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply