Headlines

சீனாவை புரட்டி போட்ட கனமழையில் 4 பேர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தெற்கு சீனாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சூவில் 60.9 செ.மீ மழை பெய்துள்ளதோடு ஷாகிங் நகரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவாங்டாங்கில் உள்ள ஷென்சென் மெகாசிட்டியின் சில பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 2 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவை புரட்டி போட்ட கனமழையில் 4 பேர் பலி | 4 People Died In Heavy Rain In China

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் ரப்பர் படகுகளில் மீட்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான கடை வீதிகள், குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 1,500 ஹெக்டேர் விளை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில கிராமங்களில் நெல் மற்றும் உருளைக்கிழங்கு வயல்கள் மூழ்கியதோடு பல இடங்களில் 2வது மாடி வீடுகள் வரை மழை நீர் சூழ்ந்துள்ளது.

சீனாவை புரட்டி போட்ட கனமழையில் 4 பேர் பலி | 4 People Died In Heavy Rain In China

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது.மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

புவி வெப்பமடைதல் காரணமாக சீனாவில் வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். 

Leave a Reply