Headlines

அமெரிக்காவில் பயங்கர விபத்து சம்பவம்… மூன்று இந்தியப் பெண்கள் உயிரிழப்பு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவில் இடமெற்ற விபத்து ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கர விபத்து சம்பவம்... மூன்று இந்தியப் பெண்கள் உயிரிழப்பு! | Car Crashes Into A Tree In America 4 Indian Deaths

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள காரில் குறித்த மூவரும் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது. 

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

” வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது. மரத்தில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொருங்கியது.

3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Leave a Reply