Headlines

மசூதியில் தொழுகையின்போது நடந்த பயங்கர சம்பவம்… 6 பேர் சுட்டுக்கொலை!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடாத்தியதில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மசூதியில் தொழுகையின்போது நடந்த பயங்கர சம்பவம்... 6 பேர் சுட்டுக்கொலை! | Man Gun Shoot During Prayer Mosque 6 Killed Afghan

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் (29-04-2024) வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். கொல்லப்பட்டவர்களில் மசூதியின் இமாமும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஷியா முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலமான இந்த மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply