Headlines

கனடாவில் விலங்கு ஒன்றுக்காக மூடப்பட்ட வீதி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 கனடாவில் விலங்கு ஒன்று பாதுகாப்பாக வீதியை கடப்பதற்காக பொலிஸார் வீதியை மூடியுள்ளனர்.

பிரிட்டிஸ் கொலம்பியாவின் ஓக்பே பகுதி பொலிஸார் இவ்வாறு வீதியை மூடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடல் யானையொன்று பாதுகாப்பாக தரையிலிருந்து நீர்நிலையை சென்றடைவதற்காக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது.

கனடாவில் விலங்கு ஒன்றுக்காக மூடப்பட்ட வீதி | Road Closed In Oak Bay B C So Elephant Seal

கடல் யானை விபத்தில் சிக்கக் கூடாது என்பதற்காக பொலிஸார் குறித்த பகுதியின் வீதிப் போக்குவரத்தை ரத்து செய்திருந்தனர்.

நீர் யானை பாதுகாப்பாக நீர் நிலையை சென்றடைந்ததன் பின்னரே, வழமையான வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவில் விலங்கு ஒன்றுக்காக மூடப்பட்ட வீதி | Road Closed In Oak Bay B C So Elephant Seal

இந்த கடல் யானை குறித்த பகுதியில் பிரபல்யமானது எனவும் இதற்கு எமர்சன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply