Headlines

கென்யா ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் 40 பேர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிரேட் பள்ளத்தாக்கு மாகாணத்தில் அமைந்தள்ள பகுதி மாய் மஹியில் திடீரென உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

குறித்த சம்பவத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதுடன் மரங்கள் சாய்ந்து விழுந்து கார்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் கென்யாவில் கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

கென்யா ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் 40 பேர் பலி | 40 People Died Flood Entered The Town Of Kenya

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக அணை நிரம்பியது. கென்யாவின் முக்கிய விமான நிலையம் கடந்த சனிக்கிழமை மழை வெள்ளத்தில் மூழ்கியது.

ஓடுபாதையில் மூழ்கியதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கென்யாவில் மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேர் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கென்யா ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் 40 பேர் பலி | 40 People Died Flood Entered The Town Of Kenya

பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக முகாம் ஒன்றை அமைக்க கென்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தான்சானியாவில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். புருண்டியில் வெள்ளத்தால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply