Headlines

கடந்த 4 மாதங்களில் தென் அமெரிக்கவில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு

ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த 4 மாதங்களில் தென் அமெரிக்கவில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பலி | Last 4Months 2000 People Have Died Dengue Fever

எனினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதன்அடிப்படையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

Leave a Reply