Headlines

கனடாவில், சினிமா பணியில் தப்பிச் சென்ற நபரினால் ஏற்பட்ட கோர விபத்து

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் பவுமான்வெல் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரும், அவர்களின் பேரப்பிள்ளையும், விபத்தினை மேற்கொண்ட சந்தே நபர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மதுபானசாலையொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற போது பொலிஸார் சந்தேக நபரை துரத்திச் சென்றுள்ளனர்.

கனடாவில், சினிமா பணியில் தப்பிச் சென்ற நபரினால் ஏற்பட்ட கோர விபத்து | Baby And Grandparents Killed In Wrong Way Hwy

இவ்வாறு பொலிஸார் பின் தொடர்வதனால் குறித்த சந்தேக நபர் அதிவேக நெடுஞ்சாலையின் பிழையான திசையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

இதன் போது எதிரில் வந்த வாகனத்துடன் மோதுண்டதனால் விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆறு வாகனங்கள் மொத்தமாக மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.       

Leave a Reply