Headlines

வவுனியாவில் நடந்த கொடூரம் ; கணவன் மனைவி சடலமாக மீட்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

வவுனியா நெடுங்கேணி கிரிசுட்டான் பகுதி வீடொன்றில் கணவன் மற்றும் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (2024.05.02) மாலை இடம்பெற்றுள்ளது.

 ஆரம்ப கட்ட விசாரனை

குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் நடந்த கொடூரம் ; கணவன் மனைவி சடலமாக மீட்பு | House Vavuniya Husband Wife Corpse Recovery

இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

குறித்த நபரின் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது

வவுனியாவில் நடந்த கொடூரம் ; கணவன் மனைவி சடலமாக மீட்பு | House Vavuniya Husband Wife Corpse Recovery

மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரனைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மேலதிக விசாரனைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply