Headlines

கிழக்கு ஆப்பிரிக்கா கனமழையில் 170 க்கும் அதிகரிக்கமானோர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உட்பட பல நகரங்கள் வெள்ளக்காடு போல் காட்சியளிக்கிறது.

பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனால் லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி உள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா கனமழையில் 170 க்கும் அதிகரிக்கமானோர் பலி | Over 170 Killed In East Africa S Heavy Rains

இதற்கிடையில், தலைநகர் நைரோபியில் உள்ள பழமையான அணையான கிஜாப் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது.

இதனால், அணையின் தடுப்புச்சுவர் இடிந்து, அருகில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான பொதுமக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா கனமழையில் 170 க்கும் அதிகரிக்கமானோர் பலி | Over 170 Killed In East Africa S Heavy Rains

இதையடுத்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், கட்டிடங்கள் இடிந்து விழுந்து, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 170ஐ தாண்டியுள்ளது.

மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா கனமழையில் 170 க்கும் அதிகரிக்கமானோர் பலி | Over 170 Killed In East Africa S Heavy Rains

மேலும் இந்த வெள்ளத்தால் சுமார் 1% லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply