Headlines

நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி… 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவில் மறுவாழ்வு மையங்களில் முதியோர்களுக்கு அளவுக்கு அதிகமாக இன்சூலின் கொடுத்து தாதியொருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி... 380 - 760 ஆண்டுகள் சிறை தண்டனை! | Nurse Killed Patients By Giving Too Much Insulin

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ 5க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் பணியாற்றி வந்த மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. 

இவ்வாறான நிலையில், ஒரு கட்டத்தில் தாதி ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்து மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக தாதிகளை சந்தேகப்பட வைத்துள்ளது. 

நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி... 380 - 760 ஆண்டுகள் சிறை தண்டனை! | Nurse Killed Patients By Giving Too Much Insulin

இதனையடுத்து, தாதி ஹீதர் பிரஸ்டீவை பிடித்து விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக அவர் கூறியதை கண்டு சக தாதிகள் அதிர்ந்து போயினர். 

இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது பொலிஸாரையே அதிர வைப்பதாக இருந்தது.

இதற்கான காரணம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ள தாதி ஹீதர் பிரஸ்டீ, தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.

ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த தாதி ஹீதர் பிரஸ்டீ, கடந்த பெப்ரவரி மாத விசாரணையின்போது, தனது வழக்கறிஞர்களிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, 3 ஆயுள் தண்டனையும், 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply