Headlines

தென் அமெரிக்காவில கனமழை ; தொடர் வெள்ளத்தால் மீட்பு பணி தீவிரம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிற வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு ஏற்கனவே 37 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் பலியாகி உள்ளனர். 

இன்று(2024.05.05) காலை முதல் மழை பெய்து வருவதால் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில் மேலும் 101 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். 

தென் அமெரிக்காவில கனமழை ; தொடர் வெள்ளத்தால் மீட்பு பணி தீவிரம் | Rescue Work Intensifies Flooding In South America

மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் வழியாக ஓடும் குய்பா நதி, 1941 வெள்ளப் பேரழிவின் போது 4.76 மீட்டர் வரலாற்று உயரத்தை எட்டியது, உள்ளூர் நகராட்சி அறிக்கையின்படி. இது 5.3 மீட்டர் என்ற புதிய உயரத்தை எட்டியது.

Leave a Reply