Headlines

11 வயது பாடசாலை மாணவனுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த கதி!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவில் 11 வயது பாடசாலை மாணவனுடன் தகாத உறவில் இருந்த 24 வயதான ஆசிரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ரிவர் கிரெஸ்ட் தொடக்கப் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்த 24 வயதான மேடிசன் பெர்க்மேன் அதே பாடசாலையில் பயிலும் 11 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனார்.

11 வயது பாடசாலை மாணவனுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த கதி! | Teacher Bad Relationship With School Student Us

கைதான ஆசிரியைக்கு இன்னும் 3 மாதங்களில் அவரது காதலருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தன்னிடம் பயிலும் மாணவருடன் மேடிசன் தினமும் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை அந்த மாணவரின் பெற்றோர் கவனித்து, மாணவரின் போனை சோதித்தபோது, இருவரும் ஆபாசமான குறுஞ்செய்திகளை பகிர்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடரில் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி ஆசிரியை மேடிசன் பெர்க்மேனை கைது செய்தனர்.

11 வயது பாடசாலை மாணவனுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த கதி! | Teacher Bad Relationship With School Student Us

மேலும் மேடிசனின் கைப்பையில், அவருக்கும் மாணவருக்கும் இடையிலான தகாத உறவை விவரிக்கும் வகையில் கைப்பட எழுதிய குறிப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாடசாலை வகுப்பறையில் உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களில் மாணவரிடம் ஆசிரியை மேடிசன் பெர்க்மேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் கூறுகின்றனர். 

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 வயது மாணவரின் பெற்றோர், கடந்த டிசம்பர் மாதம் ஆப்டன் ஆல்ப்ஸ் சுற்றுலா தளத்திற்கு சென்றபோது ஆசிரியை மேடிசன் பெர்க்மேனை அழைத்துச் சென்றுள்ளனர்.

11 வயது பாடசாலை மாணவனுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த கதி! | Teacher Bad Relationship With School Student Us

அப்போதுதான் மாணவரின் தொலைபேசி இலக்கம் தனக்கு கிடைத்ததாக பொலிஸாரிடம் மேடிசன் கூறியுள்ளார். 

அதே மாதத்தில்தான் மேடிசனுக்கு அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இச் சம்பவம் தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பாடசாலையின் தலைமை ஆசிரியை கிம்பர்லி ஆஸ்டர்ஹியூஸ் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் ஆசிரியை மேடிசன் பெர்க்மேனுக்கு 25 ஆயிரம் டொலர் அபராத தொகையுடன் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 

மேலும் அவர் பாடசாலை வளாகத்தில் நுழையவோ, பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ கூடாது எனவும் உத்தரவிட்டு, வழக்கை வரும் 30-ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply