Headlines

கனடாவின் இந்தப் பகுதியில் கோர விபத்து; 3 பேர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்தின் தலைநகரான பிரெட்ரிக்டனில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

வேகமாக பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் இந்தப் பகுதியில் கோர விபத்து; 3 பேர் பலி | Three Dead Collision In Fredericton

பிரெட்ரிக்டனின் டக்லஸ் அவன்யூவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தின் சாரதியும் இரண்டு பயணிகளும் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மரத்தில் மோதுண்ட வாகனம் மற்றுமொரு வாகனத்திலும் மோதுண்டதாகவும் அந்த வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

Leave a Reply