Headlines

கனடாவில் சாலை விபத்து தொடர்பாக வெளியான அதிரடி தகவல்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவில் சாலை விபத்தில் இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியான விடயத்தில் அதிரவைக்கும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவில், கடந்த மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கனடாவில் சாலை விபத்து தொடர்பாக வெளியான அதிரடி தகவல் | New Information On Road Accidents In Canada

இந்த விபத்தில், காரில் பயணித்த, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்‌ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தையும் பலியானார்கள்.

தம்பதியர், தங்கள் மகன் கோகுல்நாத் (33), மருமகள் அஷ்விதா ஜவஹர் (27) மற்றும் பேரனான மூன்று மாதக் குழந்தை ஆதித்யா விவான் ஆகியோரைப் பார்ப்பதற்காக கனடா சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவத்தில், தற்போது மற்றொரு அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் சாலை விபத்து தொடர்பாக வெளியான அதிரடி தகவல் | New Information On Road Accidents In Canada

அது என்னவென்றால், திருடமுயன்று பொலிசாரால் துரத்தப்பட்டு, தவறான திசையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய நபரும் ஒரு இந்தியர்தான்.

அவரது பெயர் ககன்தீப் சிங் (21). சர்வதேச மாணவராக கனடாவுக்கு வந்த சிங், ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் சிக்கி, ஜாமீனில் வந்திருக்கிறார்.

அவர் மீது ஏற்கனவே மதுபானக் கடைகளில் திருடியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply