Headlines

புலிகளின் தலைவர் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை! டக்ளஸ்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றையதினம் (04-05-2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை! டக்ளஸ் | Ltte Leader Was Alive No Talk General Candidate

சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவில்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினைகளாகவே கடைப்பிடித்து வந்தனர்.

புலிகளின் தலைவர் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை! டக்ளஸ் | Ltte Leader Was Alive No Talk General Candidate

அவர்கள் தமிழ் சமூகத்துக்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் உள்நோக்கம் கொண்ட சுய இலாபம் கொண்டதாகும்.

Leave a Reply