சித்திரை புத்தாண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி திருகோணமலை விபுலானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 04 அணிகள் பங்கு பற்றிய இப் போட்டிகளில் இறுதிப் போட்டியில் Royal Green மற்றும் Red 11 Kings அணிகள் மோதின. இதில் Red 11 Kings அணி Royal Green அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன் முதன்மை அணுசரனையாளராக DK Architect அணுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



