Headlines

இந்திய உட்பட 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்திய உட்பட 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Offers Free Visa To 7 Countries India

இலங்கையின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது.

இந்திய உட்பட 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Offers Free Visa To 7 Countries India

இந்த சூழலில் வெளிநாட்டு நிறுவனத்தால் கையாளப்படும் விசாக்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது அங்கு சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதை இலங்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச விசா சேவையை தொடர அரசு உறுதி பூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply