Headlines

கனடாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த டோனா, நேற்று முன்தினம் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

கனடாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண் | Kerala Woman Body Found In Canada

அவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக கனடாவில் கணக்காளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.  அவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம், அவர்கள் வாழ்ந்துவந்த வீடு பூட்டிக் கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் டோனா இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

இதற்கிடையில், டோனாவின் கணவரான லாலைக் காணவில்லை. ஆகவே, அவரைத் தேடும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.  

Leave a Reply