Headlines

வானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் 2 பயணிகளிடையே மோதல்

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ விமானத்தில் இருக்கைக்காக 2 பயணிகள் அடி, தடி நடத்திய விவகாரம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

குறித்த சம்வத்தை விமானத்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் படம் எடுத்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தார். இதனால், அவர் அருகே அமர்ந்திருந்த பயணி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்தார். காலியாக இருந்த சீட்டில் ஏற்கனவே அமர்ந்திருந்த பயணி அமர இருக்கைக்கு வந்தார்.

வானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் 2 பயணிகளிடையே மோதல் ; வைரலாகும் வீடியோ | Clash Between 2 Passengers In The Flight

அப்போது இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு கேட்டார். அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் சண்டையிட்டனர்.  அவர்களின் சண்டையை விலக்கி விட விமான ஊழியர்கள் போராடினர்.

அதற்காக பயணிகள் இருவரையும் பிடித்து சண்டையை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தனர் மறுபுறம், இருவருக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்த்து மற்ற பயணிகள் பீதியடைந்து அலறுவதை வீடியோவில் காணலாம் இறுதியாக, இருவரையும் சமாதானம் செய்து ஊழியர்கள் சோர்வடைந்து விட்டனர்.

விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply