Headlines

வெளிநாட்டில் இலங்கையர் ஒருவரின் மிக மோசமான செயல்பாடு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  தெற்கு ஐரோப்பாவின் – மால்டாவில் (Malta)தனது நண்பியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 32 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது, வன்முறை, பெண்ணின் சம்மதம் இல்லாமை, அச்சுறுத்தல், தொலைத்தொடர்பு சாதனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கள் இலங்கையர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இலங்கையர் ஒருவரின் மிக மோசமான செயல்பாடு! | Sri Lankan Subjected His Friend To Inappropriate

பிணை மறுப்பு

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தற்போதுவரை நீதிமன்றில் சாட்சியமளிக்கவில்லை என கூறப்படுகிறது. அவரை பிணையில் அனுமதிப்பது சாத்தியமில்லாத ஒன்று என அந்த நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோல்டாவுக்கு இலங்கையுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் இல்லை. எனவே அவர் பிணைக்கு பின்னர் தலைமறைவானால், அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்து வர வழி இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து பிணைக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply