Headlines

கொல்லப்பட்ட பிரித்தானிய பிணைக்கைதி தொடர்பில் சில மணிநேரத்தில் வெளியான திருப்பம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

காசாவில் ஒரு பிரிட்டிஷ்-இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்த நிலையில், அவர் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிணைக்கைதி Nadav Popplewell (51) என்பவர் காசாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் அறிவித்தனர்.

ஆனால், மூன்று மணிநேரத்திற்குள் அவர் உயிருடன் இருப்பதைக் காட்டும் காணொளியை ஹமாஸ் வெளியிட்டது.

அவரது வலது கண்ணில் காயம் மற்றும் அவரின் பெயர், வயதை அவர் தெரிவிப்பது அந்த காணொளியில் காட்டப்படுகிறது.

கொல்லப்பட்ட பிரித்தானிய பிணைக்கைதி தொடர்பில் சில மணிநேரத்தில் வெளியான திருப்பம் | Information About The British Hostage Who Killed

Nadav உயிருடன் இருக்கும் காணொளி வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் அவரது குடும்பத்தின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, Nadavவின் தயார் Channah Peri (79), நவம்பர் மாதம் கத்தாரின் இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரது சகோதரி அய்லெட் ஸ்வாலிட்ஸ்கி (46), Nadavவை விடுவிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆனால், அவரின் மூத்த சகோதரர் Roi கொல்லப்பட்டார். இஸ்ரேலின் கூற்றுப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 132 பணயக்கைதிகள் காசாவில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply