Headlines

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; கொலை செய்து விட்டு பதுங்கி இருந்த இருவர் கைது

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

காலி அக்மீமன பிரதேசத்தில் ஒருவரை கொன்றுவிட்டு இரத்மலானை பிரதேசத்திற்கு வந்து அங்குள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இருவரையும்  (2024.05.11) மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 வெட்டிக்கொலை

அக்மீமன, குருந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பிரசன்ன குமார என்ற நபரே நேற்று இரவு குருந்தகந்தவில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சந்தேக நபர்கள் இருவராலும் மற்றுமொரு நபரும் தடி மற்றும் வாளினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரனைக் கொல்லும் முயற்சியும் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; கொலை செய்து விட்டு பதுங்கி இருந்த இருவர் கைது | Two People Who Hiding After Killing Were Arrested

பின்னர், சந்தேகநபர்களில் ஒருவரின் உறவினர் வசிக்கும் இரத்மலானை பகுதிக்கு சந்தேகநபர்கள் இருவரும் வந்து அவரது இல்லத்தில் பதுங்கியிருந்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இரத்மலானை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்

Leave a Reply