Headlines

இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிற நிலையில் அதன் எதிரொலியால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

வெள்ளத்துடன் எரிமலை சாம்பல் குழம்பு

மேலும், வெள்ளத்துடன் எரிமலை சாம்பல் குழம்பும் பரவியது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி | 28 Killed In Floods In Indonesia

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த வெள்ளத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களில் பலர் பலத்த காயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply