Headlines

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்… பெண் உட்பட 4 பேர் சிக்கினர்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

வவுனியாவில் 15 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்... பெண் உட்பட 4 பேர் சிக்கினர்! | 15 Year Old Girl Gang Raped In Vavuniya 4 Arrested

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுமியை வவுனியா நகரை அண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்... பெண் உட்பட 4 பேர் சிக்கினர்! | 15 Year Old Girl Gang Raped In Vavuniya 4 Arrested

இதனையடுத்து சிறுவர் பிரிவு அதிகாரிகளை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிஸார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்... பெண் உட்பட 4 பேர் சிக்கினர்! | 15 Year Old Girl Gang Raped In Vavuniya 4 Arrested

கைது செய்யப்பட்ட 4 பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply