Headlines

மதுபோதையில் அட்டகாசம் ; பிரபல பின்னனிப்பாடகர் வேல்முருகன் கைது!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் கைதான பின்னணி பாடகர் வேல்முருகன்  கைதான  சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில், இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

மதுபோதையில் அட்டகாசம் ; பிரபல பின்னனிப்பாடகர் வேல்முருகன் கைது! | Drunkenness Famous Singer Velmurugan Arrested

அதிகாரியை தாக்கிய  வேல்முருகன்

இந்நிலையில், (மே 12) அதிகாலை அந்த வீதியூடாக காரில் வந்த வேல்முருகன், ஆற்காடு சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த மெட்ரோ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்து பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாது மதுபோதையில் இருந்த வேல்முருகன் மெட்ரோ ரயில் திட்ட உதவி மேலாளரை , ஆபாசமாகவும் பேசியுள்ளார் .

விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் வேல்முருகன் மீது புகார் அளிகப்பட்ட நிலையில் விருகம்பாக்கம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வேல் முருகனை (மே 12) இரவு கைது செய்தனர்.

இன்று, அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர் ஆடுகளம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடகராக வேல்முருகன் பாடியவர் என்பதுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர்  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply